சோம்பேரியின் வாழ்கை

in #try4 years ago

ஒவ்வொரு நாளும் பலபேருக்கு போராட்டமா அமையுது..சிலருக்கு போராட்டமே வாழ்க்கையா இருக்குனு நொந்துக்ராங்க. அட ஏங்க இப்படின்னு கேட்டா, "அட போயா உனக்கென்ன தெரியும்.
என் இடத்துல நீ இருந்த்ருந்தா தெரியும், ஏன்டா பொறந்தோம்னு இருக்குனு", வள்ளுன்னு விழுவாங்க.
கேட்டவன் வாயும் மூடிட்டு போகவேண்டயது தான்.. வேறென்ன பண்ண முடியும்...

என்னடா வாழகைன்னு நொந்துகிட்டு இருந்தா என்ன நடக்கும்.. ஒன்னுமே நடக்காது.
'எழுந்து எதாவது பண்ணுங்களேன் சார்' , அசரீரி மாதிரி யாரவது சொல்லிட்டு அவங்கவங்க வேலைய பாக்க போயிருவாங்க..
இவனோ ' அவன் பாட்டுக்கு சொல்லிட்டு போய்டான். என் பாடு எனக்குல தெரியும்னு' மறுபடியும் போர்வைக்குள்ள பதுங்கிடுவான்.

சரி, போர்வைக்குள்ளே பதுங்கிக்கோ...
ஒரு 5 நிமிஷம் சிந்திச்சு பாத்தாலே நி எவ்ளோ பெரிய சோம்பேறின்னு புரியுமே.
நினச்சு பாக்கவே ரொம்ப சோம்பலா இருக்குங்க நு மறுபடியும் போத்திகுவான்..

சுர்ருன்னு வயிறு குத்தும்.. அப்போதான் ஓஹோ நமக்கு பசிக்குதுன்னு மூளை கிண்டி விடும்..
எழுந்து உக்காந்து 'அடியே, சாப்பாடு
கொண்டா டி' குரல் கொடுப்பான்..
'கஞ்சியா, அது மாட்டும் தான் நம்ம வீட்ல குறைன்னு ஒரு குரலும், கூடவே ஒரு வெறும் சட்டியும் வெளிய வந்து விழும்'..

உணர்ச்சி உள்ளவன் அந்த நிமிஷத்ல 'சோ, நம்ம வாழ்க்கை இப்டிய இருக்கணும்' எழுந்து யோசிப்பான். அடுத்தது என்ன பண்லாம்நு யோசிப்பான். அடுத்த நாளும் இதே போல இருக்க கூடாதுன்னு, அவன் வாழ்க்கைய மாத்திக்க முயற்சி செய்வான்.

உணர்ச்சியும் சொரணையும் என்னனே தெரியாதவன், அதான் மேலே சொன்ன நம்ம ஆள், அவன மாத்ரி ஆள் ' அடியே, என்ன கொழுப்பு டி உனக்குன்னு' லைவ் கால்பந்து விளையாடுவான்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தம் வாழ்கை என்னவென உணரும் வரை " என்னடா இது வாழ்க்கை' என்ற நிலைதான் நிலைக்கும்.
என்றொருவன் தன் வாழ்கையை உணர்ந்து முன்னேற முயற்ச்சி செய்கிரானோ அவனே வாழ்க்கையில் வெற்றி பெருவான்.

அதைத்தான் திரு வல்லுவர் கைறினார்:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.26
JST 0.040
BTC 97162.82
ETH 3468.35
SBD 1.57