வெடித்துச்சிதறிய ரெட்மீ; வெடிப்பின் காரணத்தை ஒற்றுக்கொண்டது சியோமி.!

in #mobiles7 years ago

இந்தியா மற்றும் சீனாவில் அதிக அளவு சியோமி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது சியோமி நிறுவனம். அந்த வரிசையில் சியோமி ரெட்மீ நோட் 4 மொபைல் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. EXPAND சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் சூர்யகிரன் என்பவரது சியோமி ஸ்மார்ட்போன் வெடித்துசிதறியது இதனால் அவர் தொடை கருகியது, மேலும் பலத்த காயம் ஏற்ப்பட்டது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! சூர்யகிரன்: ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரியைச் சேர்ந்தவர் சூர்யகிரன், இவர் 20நாட்களுக்கு முன்பு சியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போனை வாங்கியுள்ளார். இந்த மொபைல் வாங்கிய சில நாட்களிலேயே வெடித்துச் சிதறியது சியோமி ஸ்மார்ட்போன். தொடை கருகியது: சூர்யகிரன் சியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தபோது தீடிரென வெடித்துச்சிதறியதுஇதனால் அவரது தொடை கருகியது, மேலும் பலத்த காயம் ஏற்ப்பட்டது. சியோமி நிறுவனம்: சியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போன் வெடித்ததை அடுத்து, சியோமி நிறுவனம் அந்த இளைஞரை தொடர்புகொண்டுவெடித்துச்சிதறிய ஸ்மார்ட்போனை பெற்று ஆய்வு மேற்க்கொண்டது. அழுத்தம்: சியோமி நிறுவனம் ஆய்வு மேற்க்கொண்டு கூறிய காரணம், அதிகப்படியான அழுத்தம் தரப்பட்டதால் இந்த ஸ்மார்ட்போன்வெடித்திருக்கலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இதனால் பேட்டரியும் திரையும் சேதமடைந்துள்ளது என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இழப்பீட்டுத் தொகை: சூர்யகிரன் வெடித்துசிதறிய ஸ்மார்ட்போனுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு நீதிமன்றத்திற்குசெல்ல இறுப்பதாக தெரிவித்தார். ஸ்மார்ட்போன்: ஸ்மார்ட்போனில் அதிக அழுத்தம் ஏற்படாத வண்ணம் பயன்படுத்த வேண்டும் என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58559.96
ETH 3156.41
USDT 1.00
SBD 2.44