Which is the Best Investment Plan in India for Middle Class in Tamil | பணம் சம்பாதிக்க எளிய வழிகள் I
பாகம் ஒன்று.
நீங்கள் செல்வந்தராக விரும்புகிறீர்களா?
அதற்காக இதுவரை முயற்சிகள் பல எடுத்தும், எதிலும் வெற்றி பெற முடியவில்லையா?
நல்ல ஒரு திட்டத்தை தெளிவாக அறிந்து கொண்டு அதனை செயல்படுத்தி, பொருளாதார ரீதியான வெற்றி பெற உங்களுக்கு விருப்பமா?
அப்படியென்றால், பொறுமையுடன் இங்கே சொல்லப்பட்டிருக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனமுடன் படித்துவிட்டு, பின்பு ஒவ்வொரு நாளும் இதை செயல்படுத்தி வாருங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
விலைவாசி, அதாவது எல்லா பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. சராசரியாக எல்லா பொருட்களின் விலையும் வருடத்திற்கு 12% என்கிற அளவில் உயர்ந்து கொண்டே போகிறது என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த யதார்த்தமான உண்மை.
அந்த வகையில் பார்த்தால், எல்லாப் பொருட்களின் விலையும் 6 வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு மடங்காக தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது.
இந்த விலை உயர்வை நாம் எவ்வாறு மேற்கொள்ளவேண்டும்? ஆமாம், நாம் செல்வந்தராக வேண்டுமென்றால், முதலில் விலைவாசி உயர்வு, நம்மை பொருளாதார ரீதியாக பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முதலாவதாக நாம் சேமிக்க கற்று கொள்ளவேண்டும்.
எப்படி சேமிக்கவேண்டும்?
- சிக்கனம்தான் மிகச் சிறந்த சேமிப்பு.
ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு, அது நமக்கு அத்தியாவசியமா இல்லையா என்று முதலில் முடிவு செய்யவேண்டும். அத்தியாவசியமான தேவை என்றால் அந்தப் பொருளை வாங்கலாம். இப்பொழுது தேவை இல்லை, பிறகு கூட வாங்கிக்கொள்ளலாம் என்று நீங்கள் முடிவு செய்தால், அந்த பொருளை உடனடியாக வாங்காமல், சில நாட்களுக்கோ, வாரங்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ உங்கள் பர்ச்சேஸ் ஒத்திப்போடலாம்.
- நீங்கள் சேமித்த பணத்தை எங்கே பாதுகாக்கலாம்? வங்கியில் டெபாசிட் செய்யலாமா? தபால் துறையில் வாய்ப்பு நிதியில் போட்டு வைக்கலாமா? அல்லது காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா?
மேலே கூறிய அனைத்து நிறுவனங்களுமே நம்முடைய பணத்திற்கு 5% அல்லது அதற்கும் குறைவாகத் தான் வட்டி கொடுக்கிறார்கள். ஆனால் விலைவாசி ஒரு வருடத்திற்கு 12% உயர்ந்து கொண்டே போகிறது. எனவே நீங்கள் சேமிக்கும் பணமும் உங்களுக்கு வருடத்திற்கு 12% குறையாமல் வட்டி பெற்றுக்கொடுத்தால்தான், நீங்கள் நஷ்டமடைவதிலிருந்து தப்பித்துக்கொள்ளமுடியும்.
சரி, நீங்கள் செல்வந்தராக வேண்டுமென்றால் எந்த முறையில் சேமிக்கவேண்டும்? நீங்கள் சேமிக்கும் பணம் வருடம் ஒன்றுக்கு 15% மேல் 24% வரை உங்களுக்கு வட்டி பெற்றுக்கொடுத்தால்தான், நீங்கள் விலைவாசியுடன் போட்டி போட்டு ஜெயித்து, அதன் பிறகு செல்வந்தராக முடியும்.
15% மேல் வட்டி யார் கொடுக்கிறார்கள்? பெரிய பெரிய ஏல சீட்டு கம்பெனிகள் கொடுக்கிறார்கள். ஆனால், நிறைய சீட்டு கம்பெனிகள் இரவு கதவை மூடிவிட்டு சென்றபின்பு, மறுநாள் காலை திறக்காமலேயே இருந்துவிடுகிறார்கள்.அப்படியானால், பணம் முதலீடு செய்தவர்களின் நிலைமை என்ன? IT BECOMES A THOUSAND DOLLAR QUESTION.
மேற்கூறிய பிரச்சனைகளையெல்லாம் தாண்டி, நமது பணத்தை நல்ல வகையிலே முதலீடு செய்து வருடத்திற்கு 24% மேல் வளர்ச்சி பெறக்கூடிய அளவிற்கு ஏதாவது நேர்மையான வழி இருக்கிறதா? நீங்களும் உங்கள் வாழ்க்கையிலே செல்வந்தராக முடியுமா?
நிச்சயம் முடியும். அந்த வழியைப் பின்பற்றி அநேகர் செல்வந்தராகி கொண்டே இருக்கிறார்கள். அதைப் பற்றி நீங்களும் முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டுமா?
பாகம் இரண்டில், அதைப்பற்றிய விபரங்கள் அனைத்தும் தெள்ளத் தெளிவாக உங்களுக்கு விளக்கி சொல்லப்படும். நம்பிக்கையுடன், பாகம் இரண்டை வாசித்து பலன் பெறுங்கள். உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி.