இத்தனை மருத்துவ நன்மைகளை கொண்டதா கருப்பு திராட்சை...!!

OIP.jpg

திராட்சையில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக திராட்சையில் வைட்டமின் டி, சர்க்கரை, மாவு சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன.

திராட்சை பழத்தில் முகம், தலை முடி மற்றும் சருமத்திற்கான பயன்கள் மிக அதிகமாக உள்ளன. திராட்சையை உண்டால் நமது உடலுக்கு உடனடியாக தேவையான ஆற்றலும், நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடும், வலிமையும் அதிகரிக்கும்.

திராட்சை பழங்களில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என்று பல வகைகள் உள்ளது.

திராட்சை அதுவும் குறிப்பாக கருப்பு திராட்சை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து விடும்.

திராட்சை பழம் மலச்சிக்கலை தடுப்பதில் பெரும் பங்கு ஆற்றுகிறது. அதிலும் குறிப்பாக கருப்பு திராட்சை சிறந்தது. திராட்சை பழத்தில் சர்க்கரை அதிகளவில் உள்ளது. மற்றும் ஆர்கானிக் அமிலம் மற்றும் செல்லுலோஸ் போன்றவையும் உள்ளன. இவை வயிற்றின் அமைப்பை நல்ல முறையில் வைத்திருக்க உதவுகின்றன.

பொதுவாக திராட்சை பாசம் பலவகையான புற்றுநோய்களையூம் எதிர்த்து போராடும் ஆற்றல் தரும். அதிலும் குறிப்பாக கருப்பு திராட்சை வகை மார்பக புற்றுநோயையும் மற்ற பிற புற்றுநோய்களையும் கட்டுப்படுத்தும்தன்மை கொண்டது.

திராட்சையிலுள்ள அதிகளவிலான "ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்" உதவுகின்றன. இவை புற்று நோய்க்கு எதிராக போராடி நமது உடல் நலனை பாதுகாக்கின்றன.

திராட்சையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமது சிறுநீரகங்களை நன்றாக பாதுகாத்து நலமாக வாழலாம்.

திராட்சை பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமது இரத்தத்திலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை படிப்படியாக குறைத்து நமது உடலை சீராக்கும் பணியை செய்யும்.

திராட்சை பழத்திலுள்ள "லிவோலியிக் அமிலம்" அமிலம் நமது மயிர்கால்களை முடியின் வேர்ப்பகுதியில் இருந்து முடியை வலிமையாக்கும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்படும்.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62856.64
ETH 2425.55
USDT 1.00
SBD 2.67