பிட்காயின்-ஐ அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடு எல் சல்வடோர்

in #crypto3 years ago

பிட்காயின்-ஐ அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடு எல் சல்வடோர்
Visit Our Website
https://www.brandstore.live

new-1280x720-featured-11-1-1-1-1621417659.jpg

கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டையும், பயன்பாட்டையும் குறைக்க உலகில் பல நாடுகள் கடுமையாக முயற்சி செய்து வரும் நிலையில் மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் பிட்காயின்-ஐ அந்நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் எல் சல்வடோர் மக்கள் டாலர் பயன்படுத்துவதைப் போலவே பிட்காயினையும் அனைத்து விதமான பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்த முடியும். இதன் கிரிப்டோகரன்சி சந்தைக்கு மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

கிரிப்டோகரன்சி பிட்காயின்
உலகின் முன்னணி கிரிப்டோகரன்சியாக விளங்கும் பிட்காயின் மக்கள் அதிகம் விரும்பினாலும், அரசுகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்த அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிபர் Nayib Bukele
இந்நாட்டின் அதிபர் Nayib Bukele பிட்காயினை நாணயமாகப் பயன்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக ஜூன் 5ஆம் தேதி அறிவித்தார். ஜூன் 9ஆம் தேதி இதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த 90 நாட்களில் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிக்கும் அரசு ஆணை வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு உருவாக்க முடியும்
மியாமி பகுதியில் நடந்த பிட்காயின் 2021 மாநாட்டில் Nayib Bukele நாணயமாக அறிவிக்கப்படுவதன் மூலம் குறுகிய காலத்தில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும். நிதியியல் வர்த்தக முறையில் உலகின் நாடுகள் உடன் எளிதாகத் தொடர்பு கொண்டு வர்த்தகம் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எல் சல்வடோர் நாடு
எல் சல்வடோர் நாட்டில் சுமார் 70 சதவீத மக்கள்தொகை மக்கள் இன்னுமும் வங்கி கணக்கு இல்லாமல் வகைப்படுத்தாத பொருளாதாரத்தில் இயங்கி வருகின்றனர். பிட்காயின் அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிக்கப்படுவதன் மூலம் இந்த நிலை மாறும் என அனைத்து தரப்பினராலும் நம்பப்படுகிறது.

எல் சல்வடோர் நாடாளுமன்றத்தில் ஆதரவு

20210609_195453.png

எல் சல்வடோர் நாட்டின் நாடாளுமன்றத்தில் சுமார் 84 உறுப்பினர்களில் 62 பேர் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள காரணத்தால் எவ்விதமான தடையும் இல்லாமல் எளிதாக ஒப்புதல் பெற்றது.

அமெரிக்க டாலர்
மேலும் பிட்காயின் அதிகாரப்பூர்வ நாணயமாக இருந்தாலும் அமெரிக்க டாலர் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும், பிட்காயின் விருப்பத்தின் அடிப்படையில் மக்கள் பயன்படுத்த எல் சல்வடோர் நாடு இப்புதிய உத்தரவு மூலம் தெளிவுபடுத்துகிறது.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62617.55
ETH 2438.99
USDT 1.00
SBD 2.67